அதிக நேரம் செல்போன் பயன்படுத்திய மனைவியை கொன்று வீசிய கணவன். உதவி செய்த தந்தை..!
அதிக நேரம் செல்போன் பயன்படுத்திய மனைவியை கொன்று ஆற்றில் வீசிய கணவனின் செயலும் அதற்கு பெண்ணின் தந்தையே உதவியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கப்பலூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி ஸ்ரீநாத் – பூஜா.
இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் பூஜா அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வீடியோக்களை பதிவிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இதனால் ஸ்ரீநாத்திற்கும், பூஜாவிற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் தன் மனைவி வேறொரு நபருடன் தொடர்பில் உள்ளார் எனவும் ஸ்ரீநாத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதில் செல்போன் பயன்படுத்துவதில் பூஜாவுக்கும் ஸ்ரீநாத்திற்க்கும் இடையே சில நாட்களுக்கு முன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவியின் துப்பட்டாவால் பூஜாவின் கழுத்தை நெரித்து ஸ்ரீநாத் கொலை செய்தார். மனைவியை கொலை செய்துவிட்டு தனது மாமனாரிடம் கூறியுள்ளார். இருவரும் சேர்ந்து உடலை ஆற்றில் வீசிவிட்டு போலீசில் சரணடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





