கர்நாடகத்தில் பெண் தர மறுத்த விவசாயிக்கு நேர்ந்த சோகம்..!
கர்நாடகத்தில் பெண் தர மறுத்த விவசாயின் பயிர்களை இளைஞர் வெட்டி வீசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே உள்ள அன்சாரி பகுதியில் வெங்கடேசன் விவசாயி தனக்கு சொந்தமான நிலத்தில் பாக்கு செடிகளை பயிரிட்டு இருந்தார்.
இந்த பயிர்களை சில மர்ம நபர்கள் சேதப்படுத்தினார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவலர்கள் விசாரணை மேற்கொண்ட நிலையில் அதை ஊரைச் சேர்ந்த அசோக் என்பவர் பயிர்களை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னதாக விவசாய வெங்கடேசன் மகளுக்கும், அஷோக்கிற்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்ததாகவும் ஆனால் அசோக்கிற்கு சில தவறான பழக்கங்கள் இருந்ததால் அவருக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க வெங்கடேஷ் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
விவசாய நிலத்திலிருந்து பாக்கு செடிகளை வெட்டி விட்டு வீசியுள்ளார். இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் அசோக்கை காவலர்கள் தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





