நிலவில் டிராபிக் ஜாம்..! சந்திராயன் 3 என்ன செய்கிறது..?
சந்திராயன் 3 வரும் 23ஆம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க உள்ள நிலையில் பல்வேறு நாடுகள் அனுப்பும் விண்கலங்களால் நிலவை சுற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் கையாள்வதற்கான ஆய்வை இஸ்ரோ மேற்கொண்டுள்ளது.
ஜூலை 2023 நிலவரப்படி நிலவை ஆறு கலங்கள் சுற்றி வருகின்றன. இதில் 100 கிலோ மீட்டர் உயரத்தில் துருவம் சுற்றும் பாதையில் தொடர்ந்து சுற்றி வரும் சந்திராயன் இரண்டின் ஆர்பிட்டரும் அடங்கும். இந்த வரிசையில் ஏழாவதாக சந்திரன் மூன்று விண்கலம் கடந்த ஐந்தாம் தேதி நிலவின் சுற்றுப் பாதையில் தள்ளப்பட்டது.
அடுத்ததாக ரஷ்ய அனுப்பி உள்ள லூனா 25 விண்கலம் வரும் 16ஆம் தேதி நிலவின் வட்டப்பாதைக்குள் செல்ல உள்ளது. இந்த விண்கலன்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் தடுக்க மேலாண்மை திட்டம் ஒன்று உருவாக்கியுள்ளது.
இதன்படி சுற்றுவட்ட பாதையின் குறுக்கே வேறு ஏதேனும் விண்கலன்கள் வந்தால் சந்திராயன்- 3ஐ திசை திருப்பவும் உரசல்களை தவிர்க்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





