மின்கம்பத்தில் துணி காயவைத்த குடும்பம்.. தூக்கி அடித்த மின்சாரம்..!
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். மாது என்பவரின் வீட்டுக்கு அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. அதில் இரும்பு கம்பி ஒன்றைக் கட்டி துணி உலர்த்துவதற்காக மாது பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது.
அந்த பகுதியில் வியாழன் இரவு பெய்த கனமழையால் துணி கம்பியை அறுந்து விழுந்துள்ளது. அந்த கம்பியை மீண்டும் கம்பத்தில் கட்டுவதற்காக மாதுவின் மனைவி மாதம்மாள் கையில் எடுத்துள்ளார்.
அப்பொழுது கம்பியில் மின்சாரம் பாய்ந்து மாதம்மாள் அலறியதையடுத்து அவரை காப்பாற்ற வந்த அவரது மகன் மற்றும் உறவு ப் பெண் ஒருவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் மூன்று பேரும் உயிரிழந்தனர். மின்கம்பத்தில் பொருத்தப்பட்ட தெரு விளக்கிலிருந்து கசிந்த மின்சாரம் துணி உலர்ந்து கட்டப்பட்ட கம்பியில் பாய்ந்ததே விபத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





