காணாமல் போன இளைஞர் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு..!
சென்னை மாம்பலம் ரயில் நிலையம் அருகே நெல்லை விரைவு ரயில் மோதி உயிரிழந்த இளைஞரின் சடலம் பராமரிப்பு பணிக்காக சென்ற ஊழியர்கள் கொடுத்த தகவலின் பெயரில் மீட்கப்பட்டது.
நெல்லை விரைவு யில் சனிக்கிழமை இரவு மாம்பலம் ரயில் நிலையத்தை கடந்து சென்ற பொழுது தண்டவாளத்தை கடக்க முயன்று இளைஞர் ஒருவர் மீது மோதி விட்டதாக ஓட்டுனர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனே போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது சடலம் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் ரயில் ஓட்டுனர் தவறுதலாக தகவல் தெரிவித்து இருக்கலாம் என்று எண்ணி போலீசார் அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் புதரில் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில் அவர் ஆதம்பாக்கத்தை சேர்ந்த 19 வயதான ஜோசப் என்பது தெரிய வந்தது. இரண்டு நாட்களாக ஜோசப்பை காணாமல் தேடி அலைந்த உறவினர்கள் அவரது சடலத்தை கண்டு கதறி அழுதனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





