--- --:--:-- --

ரயிலில் பழகிய பெண் கைவரிசை காட்டியதால் அதிர்ச்சி..!

7

சென்னை சேலையூரைச் சேர்ந்த சிறப்பாசிரியருடன் ரயில் பயணத்தில் நட்பாக பழகிய இளம்பெண் ஒருவர் ஆசிரியரின் வீட்டிற்கு சென்று தங்கி அவரது செல்போனை திருடி சென்றுள்ளார்.

 

சேலையூர் இந்திரா நகரை சேர்ந்தவர் நளினி. மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு சிறப்பாசிரியர் அனைவருடன் மின்சார ரயில் பயணத்தில் நட்பாக பழகிய பவித்ரா என்ற இளம்பெண் அவரது வீட்டிற்கு சென்று வேலை வாங்கி தருமாறு கெஞ்சியதுடன் அங்கேயே தங்கியுள்ளார்.

 

இன்று அதிகாலை நளினி கழிவறைக்கு சென்ற பொழுது கழிவறை கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு அவரது விலை உயர்ந்த செல்போனை பவித்ரா திருடி சென்றுள்ளார். பின்னர் கழிப்பறைக்குள் இருந்த ஆசிரியரின் குரல் கேட்டு அவரது மகன் வந்து மீட்டுள்ளான்.

 

வெளியே வந்த நளினிக்கு செல்போன் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் மோசடிப் பெண் பவித்ராவை சேலையூர் போலீசார் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon