--- --:--:-- --

காவிரி ஆற்றில் கழுத்து வரை உடலை மண்ணில் புதைத்து விவசாயிகள் போராட்டம்..!

4

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி காவிரி ஆற்றில் உடலை மண்ணுக்குள் புதை புதைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

நெல், கரும்பு ஆகியவற்றின் ஆதார விலை உயர்த்தி தரப்படும் என்ற மத்திய அரசின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியின் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த போராட்டத்தின் பத்தாவது நாளான இன்று காவிரி ஆற்றின் கழுத்து வரை உடலை மண்ணில் புதைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஐயா கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல விவசாயிகள் பங்கேற்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon