லஞ்சம் வாங்கிய வழக்கு..இரு காவலர்கள் பணி நீக்கம்..!
லஞ்சம் வாங்கிய வழக்கில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர் மற்றும் இரண்டாம் நிலை காவலர் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காவலாளர் பாலாஜி மற்றும் காவலர் கார்மேக கண்ணன் இருவரும் 2016 ஆம் ஆண்டில் வழக்கு ஒன்றில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் வாங்கியுள்ளனர். இவர்கள் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறையினர் பரிந்துரை செய்தனர்.
அதனடிப்படையில் விசாரணை நடத்திய நிலையில் ஆய்வாளர் பாலாஜி மற்றும் காவலர் கார்மேக கண்ணன் இருவரையும் பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





