--- --:--:-- --

மாவு அரைத்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்..!

9

சிட்லபாக்கத்தில் கிரைண்டரில் இட்லி மாவு அரைத்துக் கொண்டிருந்த பொழுது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை சிட்லபாக்கம் அடுத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெருவையைச் சேர்ந்த ஜெகதீஷ் அவரது மனைவி பிஜிலா வீட்டிலேயே இட்லி மாவு அரைத்து விற்பனை செய்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் கிரைண்டரில் மாவரைத்து கொண்டிருந்த பொழுது எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

 

வெளியே சென்று விட்டு திரும்பிய ஜகதீசன் மனைவி மயக்க நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

தகவலறிந்து வந்த சிட்டிலபாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon