--- --:--:-- --

இஸ்லாமிய சகோதரிகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடுங்கள் : பிரதமர் மோடி

2

க்ஷா பந்தன் பண்டிகையை இந்தாண்டு இஸ்லாமிய சகோதரிகளுடன் இணைந்து கொண்டாட வேண்டும் என்று பாஜக எம்பிக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

 

மேற்குவங்கம், ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினர்களுடன் தொடர்பு, கலந்து கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பிரதமர் மோடி பேசுகிறார்.

 

அப்போது முத்தலாக் தடைச் சட்டம் கொண்டு வந்து இஸ்லாமிய சகோதரிகளின் வாழ்க்கை பாதுகாப்பை உறுதி செய்ததாகவும் இதை இஸ்லாமிய சகோதரிகளிடம் கொண்டு சேர்க்க ஆதரவு தர வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக கூட்டத்தில் பங்கேற்ற எம்பிக்கள் தெரிவித்தனர்.

 

Right Menu Icon