போலி ஆவணம்.. தாய் கொடுத்த புகாரில் மகன் கைது..!
சென்னையில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை போலி ஆவணன் மூலமாக விற்பனை செய்ததாக தாய் கொடுத்த புகாரின் பேரில் மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
பள்ளிக்கரணை ஸ்ரீ அம்பா நகரை சேர்ந்த தங்க புஷ்பம் என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் போலி ஆவணம் தயாரித்து கடன் சொத்தை அபகரிக்க முயன்றதாக கூறியுள்ளார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜெயபெருமாளை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர்.





