அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடியே செல்லும் பள்ளி மாணவர்கள்..!
சென்னையில் அரசு பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி தனியார் பள்ளி மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவேற்காட்டில் இருந்து பிராட்வே செல்லும் அரசு பேருந்தில் முதுகில் பெரிய பைகளை மாட்டிக்கொண்டு தனியார் பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
எனவே போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





