சவுதியில் இலங்கை தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!
சவுதியில் வீட்டு வேலைக்கு சென்ற இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் உடல் முழுவதும் குண்டூசிகளால் குத்தி சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவரஞ்சனி என்பவர் குடும்பத்தோடு குடும்பச் சூழல் காரணமாக இந்த கடந்த ஜூன் மாதம் சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.
அந்த நாட்டு மொழி தெரியாததால் வீட்டு உரிமையாளர் மூலம் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார். குறிப்பாக தன்னை கடுமையாக தாக்கி உடலில் குண்டூசிகளால் குத்தி சித்திரவதை செய்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்த முகவரிடம் சிவரஞ்சினியின் கணவர் அழகிய பொழுது அவர் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தெரிந்தவர் ஒருவரின் உதவியால் சிவரஞ்சனி இலங்கை திரும்பியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடம்பிலிருந்து நான்கு குண்டூசிகள் அகற்றப்பட்டுள்ளன. அவரது உடலில் மேலும் நான்கு குண்டூசிகள் இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள் .இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.





