பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியதால் தப்பித்த முதியவர்..!
கேரளாவில் நடந்த சாலை விபத்தில் முதியவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. முதியவர் ஒருவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கால் இடறி கீழே விழுந்திருக்கிறார்.
அப்பொழுது அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஓட்டுனர் இதனை கவனித்து சாதுரியமாக செயல்பட்டு பேருந்தை உடனடியாக நிறுத்தியுள்ளார். இதன் காரணமாக முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பேருந்து ஓட்டுனருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.





