--- --:--:-- --

போனை தொலைத்ததால் பெற்றோரை கதறவிட்ட 8ம் வகுப்பு மாணவர்..!

10

செல்போனை தொலைத்த காரணத்தால் பெற்றோர் திட்டியதை பொறுத்துக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி தங்கும் விடுதிக்கு வந்த சிறுவனை மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

 

கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் ஆறு வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு மகன் செல்போனை தொலைத்ததால் பெற்றோர் கடுமையாக திட்டி உள்ளனர்.

 

இதனால் கோபித்துக் கொண்டு சிறுவன் வீட்டில் இருந்த 70 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தனது மாமாவின் பைக்கை எடுத்துக்கொண்டு 120 கிலோமீட்டர் பயணித்து கோவையை வந்தடைந்துள்ளார். கையில் புத்தாடைகள் உணவுப் பொட்டுலத்துடன் அங்கு விடுதியில் அறை எடுத்து தங்க வந்த சிறுவன் மீது சந்தேகம் அடைந்த ஊழியர்கள் திருப்பி அனுப்ப முற்பட்டுள்ளனர்.

 

அப்பொழுது அங்கு உணவு அருந்த வந்த சிறப்பு ஆய்வாளர் சதாசிவம் சிறுவனிடம் விசாரித்துள்ளார். விசாரித்ததில் சிறுவன் பொய் கூற அவர் வந்த வண்டி எண்ணை வைத்து பெற்றோரை வரவழைத்து சிறுவனை எச்சரித்து பெற்றோருக்கும் போலீசார் அறிவுரை வழங்கி சிறுவனை அனுப்பி வைத்தனர். சிறுவனின் இந்த செயலால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Right Menu Icon