அதிர வைத்த நிலநடுக்கம்.. அச்சத்தில் சாலைகளில் தஞ்சம் அடைந்த மக்கள்..!
அந்தமான் தீவுகளில் 5.3 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தென்கிழக்கில் 5.3 என்ற அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி கேம்பல் வளைகுடாவிலிருந்து 162 கிலோமீட்டர் தொலைவில் தென்கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பீதி அடைந்த மக்கள உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினர்.
மேலும் உயிர் சேதம் அல்லது பொருட்செதங்கள் பற்றிய தகவல்கள் இதுவரை எதுவும் வெளியாகவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





