--- --:--:-- --

காவல்துறை அத்துமீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.. லாக்கப் மரணத்திற்கு இபிஎஸ் கண்டனம்..!

2

தென்காசி அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்காசி புளியங்குடியை சேர்ந்த தங்கசாமி என்ற இளைஞர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

 

சந்தேகத்திற்குரிய வகையில் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த இளைஞர் இறந்தது தமிழகத்தில் லாக்கப் இடங்கள் இறப்பு பட்டியலில் ஒரு எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகவும், காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொள்வது ஏற்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon