திருப்பூர் பனியன் சந்தையில் பயங்கர தீ விபத்து..!
திருப்பூர் காதர் பேட்டை பனியன் சந்தையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 கடைகள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. 50 கடைகளில் பரவிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டினர்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ 50 கடைகளுக்கு மேல் பரவியது. தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதைத் தொடர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க தொழிலாளர்கள் முயன்றனர். ஆனால், வேகமாகப் பரவிய தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குத் திருப்பூர் வடக்கு, தெற்கு என இரண்டு தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சம்பவ இடத்தில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நேரில் ஆய்வு செய்தார். நான்கு தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்புத் துறையினர் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





