டிவியை திருடி மகனிடம் கொடுத்து அனுப்பிய தந்தையின் அதிர்ச்சி செயல்..!
விற்பனையகத்தில் 70,000 ரூபாய் மதிப்புள்ள டிவியை நபர் ஒருவர் திருடி பிள்ளைகளிடம் கொடுத்து அனுப்பி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காட்டில் உள்ள தனியார் வீட்டு பொருட்கள் விற்பனை இடத்தில் தொலைக்காட்சி பெட்டி வாங்குவதற்காக தனது பிள்ளைகளுடன் சென்றுள்ளார்.
அங்கு 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தொலைக்காட்சி பெட்டியை வாங்குவதற்காக வந்த நிலையில் கடை ஊழியர் பேக் செய்து வைத்துள்ளார். யாரும் பார்க்காத நேரம் அதனை பிள்ளைகளிடம் கொடுத்து அனுப்பிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வினோத் கடையிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதையடுத்து கடையின் மேலாளர் அளித்த புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வினோத்தை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.






