--- --:--:-- --

அதிகாலையிலேயே அவசர அவசரமாக லண்டன் கிளம்பினார் அண்ணாமலை..!

10

று நாள் பயணமாக சென்னையிலிருந்து துபாய் வழியாக லண்டனுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அதிகாலை புறப்பட்டு சென்றார். தமிழ்நாடு பாஜக தலைவர் ஆக பொறுப்பேற்ற பிறகு கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது படிப்புக்காக அண்ணாமலை சென்றிருந்தார்.

 

அமெரிக்காவில் அவர் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தார். அதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் இலங்கைக்கு மூன்று நாள் பயணமாக அவர் சென்றிருந்தார்.

 

உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு நிதியுடன் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளை ஒப்படைத்து அவர் இலங்கைக்கு சென்றிருந்தார்.

 

தற்பொழுது மத்திய பாஜக அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனையை விளக்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் லண்டன் செல்கிறார். இந்த பயணத்தின் பொழுது லண்டனில் உள்ள தமிழ் சங்க பிரதிநிதிகளையும் அண்ணாமலை சந்தித்து பேச உள்ளார்.

 

Right Menu Icon