--- --:--:-- --

விபரீத முயற்சியால் கடலுக்கு அடியில் எழும் மர்ம சத்தம்..!

8

டைட்டானிக் கப்பலை காண சுற்றுலா சென்று மாயமான நீர் மூழ்கிக் கப்பலை தேடும் பணியின் பொழுது கடலுக்கடியில் ஓரிடத்திலிருந்து சத்தம் கேட்டது கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

 

அட்லாண்டி கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை காண ஐந்து பேருடன் சுற்றுலா சென்ற நீர்மூழ்கி கப்பல் கடந்த 18ஆம் தேதி மாயமானது. அந்தக் கப்பலை தேடும் பணி மூன்றாம் நாளாக தொடங்கியது.

 

இந்நிலையில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த கனடா விமானப்படை விமான கப்பல் மூழ்கியுள்ள பகுதியிலிருந்து 30 நிமிடங்களுக்கு ஒரு முறை ஏதோ ஒன்றை இழுப்பது போல் வினோத சத்தம் கேட்பதாக கண்டறிந்ததாகவும் அந்த இடத்தில் நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 

மாயமான நீர்மூழ்கியை கப்பல் 96 மணி நேரம் வரை கடலுக்கு அடியில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது அதன்படி கப்பலில் ஆக்ஸிஜன் சப்ளை தீர்ந்துவிடும் என்பதால் அதற்குள்ளாக கப்பலை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

Right Menu Icon