--- --:--:-- --

திடீரென இடிந்து விழுந்த பால்கனி.. கொத்தாக விழுந்த மக்கள்..!

7

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஜெகநாத் ரத யாத்திரையின் பொழுது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. பழமையான கட்டடத்தின் ஏழாவது மாடியின் பால்கனியில் நின்று ரத யாத்திரையை கண்டு களித்துக் கொண்டிருந்தனர் பக்தர்கள் சிலர்.

 

அப்பொழுது திடீர் என பால்கனி பாரம் தாங்காமல் சுக்கு நூறாக உடைந்து விழுந்துள்ளது. இதில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் படுகாயம் அடைந்ததோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்நிலையில் படுகாயம் அடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon