ஆற்றில் விழுந்த ராணுவ ஹெலிகாப்டர்.. பயிற்சியின் போது சோகம்..!
கனடாவில் விமானப்படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்திற்கு உள்ளானதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை பெட்டாபாத்தில் உள்ள ராணுவ தளம் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த சி ஹெச் 147 ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்த விபத்திற்கு உள்ளானது.
ஹெலிகாப்டரில் பயணித்த நான்கு வீரர்களின் இருவர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் மற்ற இருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாயமான இரண்டு வீரர்கள் உயிரிழந்து விட்டதாக கனடா பிரதமர் ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.






