சினிமா புகழ் மூலம் முதல்வராகி விடலாம்.. நடிகர் விஜயை சாடிய திருமாவளவன்..!
நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது தமிழ்நாட்டின் சாபக்கேடு என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை அகற்ற கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்து மதிமுக முதன்மை செயலாளர் துறை வைகோ அதற்கான கையொப்பம் பெற்றார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக செயலாளர் துறை வைகோ தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சரவை மூலம் மக்களுக்காக ஏற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதம் செய்கிறார் என குற்றம் சாட்டினார்.
பின்னர் பேசிய திருமாவளவன் சினிமா புகழ் இருந்தால் போதும் முதல்வராகி விடலாம் என சில நடிகர்கள் நினைப்பதாக தெரிவித்தார்.






