--- --:--:-- --

600/600 மதிப்பெண் பெற்ற நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்த விஜய்..!

6

மிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்குகிறார். இதற்கான நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றுவருகிறது.

 

இந்த விழாவில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர். அதேசமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கிவருகிறார்.

 

நிகழ்வில் பேசிய பிறகு மாணவர்களுக்கு நடிகர் விஜய் பரிசளிக்கத் துவங்கினார். முதலாவதாக பிளஸ் டூ தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நந்தினிக்கு சான்றிதழுடன் வைர நெக்லஸ் பரிசளித்தார். நந்தினி அவரது குடும்பத்துடன் வந்து விஜய்யிடம் இருந்து பரிசை பெற்றுக்கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon