சென்னையில் டெலிவரி பாய்க்கு பெண் செய்த அதிர்ச்சி சம்பவம்..!
சென்னை ஆழ்வாரில் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை பெற்று அதில் உடைந்த வேறொரு பொருளை வைத்து மோசடியில் ஈடுபட்டதாக பெண் மீது ஆன்லைன் ஊழியர் புகார் அளித்துள்ளார்.
பார்கவி என்பவரிடம் மொழி திருத்தம் செய்யும் மிஷினை ஆன்லைன் டெலிவரி ஊழியர் டெலிவரி செய்துள்ளார். அப்பொழுது பார்சலை பெற்றுக்கொண்டு வீட்டினுள் சென்ற பார்வதி உள்ளே வேறொரு உடைந்த பொருளை வைத்துவிட்டு டெலிவரி செய்த பொருள் உடைந்து இருப்பதாக கூறி அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துள்ளார்.
இது குறித்து அறிந்த டெலிவரி ஊழியர் அந்த பெண்ணிடம் விசாரித்த பொழுது காவல் நிலையத்தில் புகார் அளிக்க போவதாக அவர் மிரட்டியுள்ளார். பின்னர் இது தொடர்பாக சித்திக் அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் பார்கவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





