பெண்களுக்கு எதிரான வழக்குகளில் நடவடிக்கை இல்லை.. காவல்துறையை வறுத்தெடுத்த குஷ்பூ
தேசிய மகளிர் ஆணையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க கோரி கூடுதல் டிஜிபியிடம் பாரதியார் ஜனதா குழு உறுப்பினர் குஷ்பு, சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் கூடுதல் டிஜிபி குஷ்பு சந்தித்தார்.
அப்பொழுது தேசிய மகளிர் ஆணையத்தின் நிலைமையில் உள்ள நிலுவை உள்ள வழக்குகளை உடனடியாக விசாரிக்க கோரிக்கை விடுத்துள்ளார். 2021 ஆம் ஆண்டு முதல் தேசிய மகளிர் ஆணையத்தில் உள்ள வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறினார்.
திருவண்ணாமலை ராணி உயிரிழந்த விவகாரத்தில் விசாரணையை தீவிர படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பெண்களுக்கு எதிரான வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆண்கள் கையில் வைத்து விளையாடுவதற்கு பெண்கள் பொம்மைகள் இல்லை என்றும் குஷ்பு கடுமையாக பேசினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





