டெலிவரி ஏஜென்ட் மீது பொய் பழியை போட்ட சிறுமி..!
பெங்களூரில் 8 வயது சிறுமியின் பொய்யான புகார் காரணமாக உணவு டெலிவரி செய்ய வந்த நபர் குடியிருப்பு வாசிகளால் அடித்து உதைத்து தாக்கப்பட்டார்.
தன்னை வலுக்கட்டாயமாக மாடிக்கு கொண்டு சென்றதாகவும் தான் அவர் கையை கடித்து தப்பி வருவதாகவும் சிறுமி கூறியதால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் குடியிருப்பு வாசிகள் உணவு டெலிவரி ஏஜென்ட்டை சரமாரியாக தாக்கினார்.
ஆனால் விசாரணையில் கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்த பொழுது சிறுமி தானாகவே மாடிக்கு சென்று விளையாடியதும் பெற்றோர் கண்டிப்புக்கு பயந்து டெலிவரி ஏஜென்ட் மீது பழியை போட்டதும் தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





