--- --:--:-- --

தாய் செய்த செயல் கண்முன்னே உயிரிழந்த மகள் – அதிர்ச்சி சம்பவம்

2

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் படுக்கைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த ஸ்பிரிட்டை தண்ணீர் என நினைத்து 9 வயது மகளுக்கு தாய் கொடுத்த நிலையில் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த ஆனந்தகுமார் – தீபா தம்பதியின் 9 வயது மகள் சிறுநீரக கோளாறு காரணமாக முதலில் ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தண்ணீர் கேட்க படுக்கைக்கு கீழே இருந்த பாட்டிலை எடுத்து மகளிடம் தாய் கொடுத்துள்ளார்.

 

இதை குடித்த அகல்யா உடனே உமிழ்ந்து விட்டதாக தெரிகிறது. இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த விளக்கங்களை சொல்ல மருத்துவமனை நிர்வாகம் சிறுநீரக கோளாறு காரணமாகவே சிறுமி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon