வளைவில் முந்த முயன்ற வாகனங்கள்.. கவிழ்ந்த லோடு ஆட்டோ..!
வளைவில் முந்த முயன்ற ஒரு காரால் முன்னாள் சென்ற லோடு ஆட்டோவும் இருசக்கர வாகனமும் சாலையின் ஓரத்திலிருந்து மின்கம்பத்தில் பயங்கரமாக மோதி விபத்திற்கு உள்ளாகின.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை அதிர வைத்துள்ளது. கேரள மாநிலத்தில் இந்த விபத்து சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒரே நேரத்தில் சாலையின் வளைவில் வந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று முந்த முயன்றுள்ளனர்.
இதில் கார் வேகம் அதிகரித்து முன்னேறிச் செல்லவே கார் மீது மோதாமல் இருக்க லோடு ஆட்டோவை திசை திருப்பி உள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது.
இதில் மூன்று பேர் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





