--- --:--:-- --

பட்டப் பகலில் ரயிலில் பெண்ணிடம் கொள்ளை..!

5

சென்னையில் இருந்து ரயிலில் சென்ற பெண்ணிடம் 17 சவரன் தங்க நகை மற்றும் செல்போனை திருடிக் கொண்டு தப்பி செல்லம் முயன்றவரை சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

 

சென்னை ஐயப்பன் தாங்கல் பகுதியை சேர்ந்த 67 வயதான சூர்யா என்ற பெண் பொள்ளாச்சி செல்வதற்காக பாலக்காடு சென்ற ரயில் நிலையத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அதிகாலையில் சேலம் ரயில் நிலையம் சென்றதும் ஏசி கோச்சில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் இறங்கி சென்றார்.

 

இதனை கவனித்த டிக்கெட் பரிசோதகர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் திருச்சியை சேர்ந்த முத்துராமன் என்பதும் பெண் பயணியிடமிருந்து 17 சவரன் தங்க நகை மற்றும் செல்போனை கொள்ளையடித்ததையும் ஒப்புக்கொண்டார்.

 

மேலும் இவர் ரயில் பயணிகளிடம் தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. முத்துராமன் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Right Menu Icon