இரண்டு குழந்தைகளுடன் தாய் விபரீத முடிவு..!
பணி நிமித்தமாக கணவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் தனது இரு குழந்தைகளுடன் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்சி எடமலைபட்டியை சேர்ந்தவர் 33 வயதான மனோஜ் குமார்.
இவருக்கு 26 வயதில் ஷோபனா என்ற மனைவியும் மூன்று வயதில் ஒரு மகனும், 11 மாத கைக்குழந்தையும் உள்ளனர். பர்னிச்சர் கடை நடத்தி வந்தவர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஸ்ரீரங்கத்தில் உள்ள பர்னிச்சர் கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
பணி நிமித்தமாக கொடைக்கானல் சென்று விட்டு வீடு திரும்பிய மனோஜ் குமார் நீண்ட நேரமாக கதவு திறக்காததால் ஜன்னல் வழியே பார்த்தபொழுது மனைவி மற்றும் குழந்தைகள் தூக்கிலிட்ட நிலையில் இருந்ததை கண்டு அலறினார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





