14 வது மாடியில் இருந்து குதித்து சிறுவன் தற்கொலை..!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பருத்திப்பட்டி 14 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை அந்த விபரீதம் அரங்கேறியது. 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் 14 வது தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் தான் வெளியாகியுள்ளது.
மகன் லோக்நாத் ஐஐடி நுழைவுத் தேர்வு பயிற்சி உடன் பிரபல பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்க வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். சென்னை அடுத்த ஆவடி பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன்பு டாக்டர் தம்பதியினர் குடிபெயர்ந்துள்ளனர்.
பருத்திபட்டில் 14 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வீடு எடுத்து தங்கி உள்ளனர். லோக்நாத்தின் தந்தையும் தாயாரும் இருவேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பேராசிரியர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர்.
திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு படிப்பதற்காக அழைத்து வந்த மகன் லோக்நாத் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ளவர். ஊரிலிருந்து கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வத்துடன் இருப்பது அறிந்து டாக்டரான தாயார் கண்டித்துள்ளார்.
சம்பவத்தன்று மதுரவாயிலில் உள்ள மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் தாயார் மலர் வேலைக்கு சென்றுள்ளார். பிற்பகலில் வீடு திரும்பிய லோக்நாத்திடம் வீட்டிற்கு வந்த கொரியரை கூட வாங்க முடியாமல் அப்படி என்ன விளையாட்டு என கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்கச்சியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு விளையாட சென்ற பொழுது வீட்டில் ஏதாவது இருந்தால் என்ன செய்வாய் என தாயார் கண்டித்துள்ளார். வீட்டிலிருந்து வெளியேறி 14 தளத்திற்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை மேற்கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





