--- --:--:-- --

பப்ஜியில் அறிமுகமாகி சிறுமியை ஏமாற்றிய இளைஞர்..!

6

ப்ஜி விளையாட்டில் அறிமுகமான 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வீட்டை விட்டு அழைத்துச் சென்று பாலில் வன்கொடுமை செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரியை சேர்ந்த 22 வயதான கவின் என்று அந்த இளைஞர் சென்னையில் பாலு உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தான்.

 

இவனும் கும்பகோணத்தை சேர்ந்த 17 வயது சிறுமையும் ஆன்லைன் பப்ஜி விளையாட்டின் மூலம் நண்பர்களாகியுள்ளனர். நட்பு காதலாக மாற இருவரும் கடந்த 17ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

 

சிறுமி காணாமல் போனதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமியின் செல் போன் எண்னை ட்ராக் செய்த போலீசார் அவர் சென்னையில் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் சென்னைக்கு சென்று இருவரையும் பிடித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

 

அப்போது சிறுமி பெற்றோருடன் செல்ல சம்மதிக்கவே அவர்களுடன் அனுப்பி வைத்த போலீசார் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon