--- --:--:-- --

துரோகம் செய்த காதலியை துடிதுடிக்க கொன்ற காதலன்..!

9

விசாகப்பட்டினம் கடற்கரையில் காதலி கழுத்தை நெரித்து கொன்ற காதலன் போலீசில் சரண் அடைந்தான். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் இளம் பெண் சிராவணி. கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியே வசித்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கோபால் என்ற இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். அவர் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில் இதை அறிந்து கோபால் ஆத்திரமடைந்துள்ளார்.

 

விசாகப்பட்டின கடற்கரைக்கு சிறுமியை வரவழைத்த இளைஞர் அவரை கழுத்தை நெறித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon