--- --:--:-- --

பிரஸ் ஜூஸ்சில் இருந்த கரப்பான் பூச்சி..!

7

woman hand pouring papaya juice on glasses with slice papaya on wooden background, healthy and diet fruit

வேலூர் அருகே பழச்சாறு விற்பனை கடையில் வாங்கிய பழச்சாறில் கரப்பான் பூச்சி விழுந்ததால் ஜூஸ் பாட்டில் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

ஆரணி சாலையில் ஜூஸ் கடையில் பிரசாந்த் என்பவர் தனது குழந்தைக்காக பழச்சாறு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். ஜூஸ் பாட்டிலில் கரப்பான் பூச்சி செத்து மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரசாந்த் உடனடியாக பழச்சாறு கடைக்கு சென்று ஜூஸ் பாட்டிலில் கரப்பான் பூச்சி செத்து கிடப்பதாக கூறியுள்ளார்.

 

அதில் சரியாக பதில் அளிக்கவில்லை என கூறி பிரசாந்த் வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் இது போன்று கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் எடுத்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon