வேறு சமூகத்தினரை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்காமல் தடுத்த கிராம மக்கள்..!
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் சுவாமி தரிசனம் செய்ய குறிப்பிட்ட சமூக மக்களை அனுமதிக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மூன்று பேர் திடீரென மண்ணென்னெய் ஊற்றி தீக்குளிக்கு முயன்றது பரபரப்பு ஏற்பட்டது.
திரௌபதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சனை இருந்து வரும் நிலையில் ஒரு தரப்பினர் புகார் அளித்த பொழுது கோயிலுக்குள் நுழைவதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் கோயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டைகளையும் திரும்ப ஒப்படைத்ததாக தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





