பஸ்ஸில் மாணவியிடம் சில்மிஷம் செய்த கண்டெக்டர்..!
கோவையில் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நடத்துனரை தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கோவை நோக்கி சென்ற அரசு பேருந்து பயணம் செய்த கல்லூரி மாணவியுடன் நடத்துனராக பணிபுரியும் ஞானசேகர் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த மாணவி தனது நண்பர்களை வரவழைத்து கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே இறங்கிய பொழுது பேருந்து வேகமாக புறப்பட்டது.
இதனையடுத்து அந்த மாணவி நண்பர்கள் பேருந்து வழிமறித்து பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நடத்துனரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





