--- --:--:-- --

காட்டு யானையை தொந்தரவு செய்த நபர் கைது..!

3

தர்மபுரியில் சாலையோரம் நின்றிருந்த காட்டு யானையின் அருகில் சென்று தொந்தரவு செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் செல்லும் வனப்பகுதியில் சாலையோரம் காட்டு யானை நின்று கொண்டிருந்தது.

 

அந்த வழியாக பயணம் செய்த ஒருவர் மது போதையில் யானையின் அருகில் சென்று அதனை வணங்கினார். இதனால் அச்சமடைந்த யானை பிளிறிய பொழுது சற்று உள்ளே சென்றது. ஆனாலும் அந்த நபர் சற்று மாற்றம் இன்றி மீண்டும் யானையின் அருகே சென்று கீழே விழுந்து வணங்கியதோடு கைகளை மேலே உயர்த்தியபடி சில நிமிடங்கள் நின்றிருந்தார்.

 

இதனால் யானை கோபமடைந்து அருகில் இருந்த மரக்கன்றை மூட்டி தள்ளியது. சமூக வலைதளத்தில் இந்த காட்சி வெளியாகியதை தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டதாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon