கர்நாடக சட்டசபைத் தேர்தல் : காங்கிரஸ் முன்னிலை
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. தற்போதைய நிலையில் பெரும்பான்மைக்கான 113 இடங்களை காங்கிரஸ் நெருங்கி உள்ளது. பாஜகவின் 8 அமைச்சர்கள் தோல்வி முகத்தை எதிர்கொண்டுள்ளனர்.
கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவாகி இருந்தன
📱 Share on WhatsApp 𝕏 Share on X




