விடுதியில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட இளைஞர்..!
சென்னையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்ட இளைஞரை போலீசார் மீட்டனர். ஸ்ரீராம், அசார் என்பவரிடம் குருவியாக இருந்து வந்துள்ளார். அண்மையில் மஸ்கட்டிற்கு சென்று திரும்பிய ஸ்ரீ ராம் 300 கிராம் தங்கத்தை கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பயந்து தங்கத்தை கழிவறையில் போட்டுவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர் ஸ்ரீ ராமை மீண்டும் அழைத்துச் சென்று தங்கத்தை தேடியுள்ளார்.
கிடைக்காததால் ஸ்ரீ ராமை ரூமில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளார். ஸ்ரீ ராமை நண்பர் அசாருதீன் வாட்ஸ் அப்பில் கொடுத்த தகவல்களை வைத்து போலீசார் ஸ்ரீராம் இருக்கும் இடத்தை கண்டறிந்து மீட்டனர். இந்த வழக்கு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் கடத்தல் கும்பல் தலைவன் அசாரை போலீசார் தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





