--- --:--:-- --

போலி கொரோனா சான்றிதழை வைத்து பக்காவாக பிளான் போட்டு ஆசிரியர்..!

7

தேர்தல் பணியில் இருந்து விலக்கு பெற பள்ளி ஆசிரியர் ஒருவர் போலி கொரோனா சான்றிதழ் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரித்து.

 

இவர் நகராட்சி தேர்தலில் வாக்குச்சாவடி அதிகாரி பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து விலக்கு பெற விரும்பியவர் அதற்காக ஒரு மனுவை அளித்தார். அத்துடன் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக கூறி மருத்துவ சான்றிதழையும் சமர்ப்பித்தார்.

 

ஆனால் அந்த சான்றிதழை அதிகாரிகள் பரிசளித்த பொழுது அது வேறொருவரின் சான்றிதழ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அவர் மீது போலீசில் புகார் அளிக்குமாறு அடிப்படை கல்வி அதிகாரிக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon