இலாகா மாற்றப்பட்ட சில நிமிடங்களிலேயே பி.டி.ஆர் ட்விட்..!
எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காக பணியாற்றும் வாய்ப்பை அளித்திருக்கும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இலாக்கா மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே அவர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதில் இந்த இரண்டு ஆண்டுகள் தன் வாழ்வில் நிறைவானதாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதித்துறையை வழங்கியதற்கும் தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கியதற்காகவும் முதலமைச்சருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல் தொழில்நுட்ப துறையை நிர்வகித்து வந்த அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் நிதி துறை பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசுக்கும் அவர் தமது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.





