தந்தையை மகனே துடிதுடிக்க கழுத்தை அறுத்து கொன்ற பயங்கரம்..!
தனது பெயரில் நிலத்தை எழுதி வைக்காத ஆத்திரத்தில் மகனே தந்தையை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே திப்பிலி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன். 90 வயதான இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் மூன்று மகள் என ஆறு பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த ஒரு வருடமாக பெங்களூருவில் உள்ள தனது மகளுடன் வசித்து வந்த முதியவர் தனது இரண்டாவது மகளுக்கு 6 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அவருடைய கடைசி மகன் சிவானந்தா முதியவரை திப்பிலி கிராமத்திற்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது.
ஆறு ஏக்கர் நிலத்தை எழுதி வைக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான். இதற்கு தொடர்ந்து மறுத்து வந்த தனது தந்தையை தோட்டத்திற்கு தனியாக அழைத்த சிவானந்தா கத்தியால் கழுத்து அறுத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





