--- --:--:-- --

நூறாவது பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

2

காரைக்கால் அருகே நூறாவது பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாகையை சேர்ந்த காமாட்சி என்ற மூதாட்டி தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் இணைந்து விழாவை சிறப்பித்துள்ளனர்.

 

இந்த நிகழ்ச்சியில் நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு மூதாட்டியிடம் வாழ்த்து பெற்று சென்றனர்.

 

நூறாவது பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி காமாட்சியின் கணவர் கணபதி சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற சுபாஷ் சந்திர போஸ் ராணுவத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon