பணம் கொடுக்காததால் ஆசிரியையை கொலை செய்த இளைஞர்..!
தூத்துக்குடி மாவட்டம் இடையன்குடி அருகே பள்ளி ஆசிரியை ஒருவர் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். குலசேகரன் பட்டினத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
நேற்று மாலை வீட்டில் இருக்கும் பொழுது திடீரென அலறல் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து குலசேகரபட்டினம் போலீசார் அவரின் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது அவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
வீட்டில் நடத்திய சோதனையின் பொழுது மாடியில் நின்று கொண்டிருந்த ஆசிரியையின் உறவுக்காரரான தீபக் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார். அப்பொழுது அவரிடம் பணம் கேட்டதாகவும் தர மறுத்ததால் கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





