கே.எல்.ராகுலுக்கு இடது பக்க தொடையில் அறுவை சிகிச்சை..!
கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கு இடது பக்க தொடையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஐபில் தொடரில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் கேப்டன் ராகுலுக்கு இடது பக்கத் தொடையில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.
இந்நிலையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக சமூக வலைதளத்தில் ராகுல் பதிவிட்டுள்ளார். விரைவில் முழு உடல் தகுதி பெற்று விரைவில் தீவிர பயிற்சிகளை மேற்கொள்ளப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐபிஎல் – ஐ தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக இந்திய அணியில் இருந்து கே.எல் ராகுல் விலகிவிட்ட நிலையில் ஆசிய கோப்பை மற்றும் ஒரு நாள் கோப்பையில் விளையாட அவர் இலக்கு வைத்துள்ளதாக தெரிகிறது.






