வெடித்து சிதறிய செல்போன்.. பாக்கெட்டில் வைத்திருந்த நபருக்கு நேர்ந்த கதி..!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கால் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த இளைஞரின் செல் போன் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே ஒப்பந்த ஊழியரான ஹரிஷ் ரகுமான் கோழிக்கோடு அலுவலகத்திற்கு பணிக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது கால் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த அவரது மொபைல் போன் எதிர்பாராத விதமாக திடீரென வெடித்தது. இதில் காயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.






