4 மணி நேரம் தண்ணீரில் இருந்து ஆறு வயது சிறுமி உலக சாதனை..!
தேனியை சேர்ந்த ஆறு வயது சிறுமி தொடர்ந்து நான்கு மணி நேரம் தண்ணீரில் மிதந்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார். பழனிசெட்டிபட்டியை சேர்ந்த வைஷா என்று சிறுமி தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார்.
இரண்டு வயது முதல் நீச்சல் பழகி வந்த சிறுமி உலக சாதனை முயற்சியாக தொடர்ந்து 5 மணி நேரம் இடைவிடாது தண்ணீரில் மிதக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த சாதனை முயற்சியின் பொழுது நான்கு மணி நேரம் 18 நிமிடங்கள் தண்ணீரில் நீந்தி சிறுமி சாதனையை நிகழ்த்தியுள்ளார்.






