கோயிலை சுற்றி வந்த கரடி.. தூக்கம் இழந்து கிடக்கும் கிராம மக்கள்..!
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பெருமாங்குளம் பகுதியில் அமைந்துள்ள இசக்கி அம்மன் கோவிலில் உலா வரும் கரடியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
களக்காடு வனப்பகுதியில் இருந்து வெளியேறி கரடி ஒன்று உணவு தேடி கிராமங்களுக்குள் புகுந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி அதிகாலை அங்குள்ள இசக்கி அம்மன் கோயில் அருகே உணவு தேடி உலாவரும் கரடியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஊருக்குள் சுற்றிவரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதனால் கரடியை பிடிக்க வனத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.






